Araly Avarampitti Sri Muthumari Amman Temple

 

அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன்

 

அராலி கிராமத்தின் கிழக்குப் பக்க முகப்பில் காவல் தெய்வம் போன்று முதலில் அமைந்திருக்கும் திருக்கோயில் தான் அராலி ஆவரம்பிட்டி  முத்துமாரியம்மன் ஆலயமாகும்.

 

ஈழத்து வரலாற்றுப் புகழ்பெற்ற தலம், பழம் பெரும் சக்தி ஆலயங்களுள் இந்த ஆலயம் முதன்மை பெற்ற ஒன்றாகும். இங்கு அம்மாள் அருவத்திருமேனி கொண்டு அருள் ஒளி பரப்பி நிற்கும் தன்மை அதி உத்தமமானதும், அற்புதமானதும் ஆகும்.

 

எமது ஆலயம் பழமை வாய்ந்த மிகச் சில கருங்கல் ஆலயங்களில் முதன்மை பெற்று இருக்கின்றது. இவ்வாலயத்தின் தூபி வேலை வேறு எந்த ஆலயங்களிலும் இல்லாத முறையில் விசேடமாக அமைக்கப் பெற்று இருக்கின்றது.

 

அராலி ஆவரம்பிட்டி  ஸ்ரீ முத்துமாரியம்மன்


logo